Rattanagiri Palamurugan Temple Aru Kona Theppakulam Opening Ceremony Vinayagar and Balamurugan Sannathi Kumbabhishekam |
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மலையடி வாரத்தில் அறு கோணவடிவில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் வலம்புரி விநாயகர், பாலமுருகன் சன்னதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் மற்றும் பாலமுருகன் சன்னதி கும்பாபிஷேகம் மற்றும் சண்முக புஷ்கரணி என்னும் தடாக பிரதிஷ்டை, தெப்பக்குளம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னி லையில் மகா சண்டி யாகம், 108 கலசாபிஷேகம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், யாக பூஜைகள், மகா தீபாராதனை, ரக்ஷா பந்தனம், பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வலம் புரி விநாயகர், பாலமுருகன் சன்னதிக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் தெப்பக்குளத் திற்கு சிறப்பு பூஜைகள், புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு தடாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, அறுகோண தெப்பக்குளம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகனாந்த சுவாமிகள், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜி.கே.உலகப்பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, தொழிலதிபர் ஏ.வி.சாரதி, ஆற்காடு கண்ணன் ஸ்வீட் லேண்ட் உரிமையாளர் கே.பாஸ்கரன், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஆற்காடு இலவச முதியோர் இல்ல தலைவர் ஜே.லட்சுமணன், துணைத்தலைவர் எஸ்.ஆர். பி.பென்ஸ் பாண்டியன், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டதலைவர் பொன்.கு.சரவணன், நகர செயலாளர் எஸ்.பாஸ்கரன், ஆரணி ரோடு வியாபாரிகள் பொதுநல சங்க ஆலோசகர் பெல். எஸ்.பிரபு, மற்றும் சைவ மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதிபதிகள் மற்றும் உபயதாரர்கள் உள்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.