A lorry carrying cement collided with a barricade near Muktukada bus stand
ராணிப்பேட்டை:முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ஆந்திரா மாநிலம் சங்ககிரியில் இருந்து சென்னைக்கு சிமெண்ட் ஏற்றி வந்த கனரக லாரி எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் தூக்கம் கலக்கம் காரணமாக சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
மேலும், இது சம்பந்தமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர், விபத்தில் காயமடைந்து லாரியில் சிக்கிக் கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.