Kiran Shruti appointed as the new SP of Ranipet district


5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. தீபா சத்யன், மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாகவும். 

சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி, ராணிப்பேட்டை எஸ்.பி.யாகவும். 

சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம், கடலூர் எஸ்.பி.யாகவும். 

கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன், சிலை கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு எஸ்.பி.யாகவும், 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவளி பிரியா, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.