குறள் : 1023

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.


மு.வ உரை :

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ் ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

கலைஞர் உரை :

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்

சாலமன் பாப்பையா உரை :

என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.


Kural 1023

Kutiseyval Ennum Oruvarkuth Theyvam

Matidhatruth Thaanmun Thurum

Explanation :

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.


Horoscope Today: Astrological prediction for February 14, 2023


இன்றைய ராசிப்பலன் - 14.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


14-02-2023, மாசி 02, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி காலை 09.04 வரை பின்பு தேய்பிறை நவமி. அனுஷம் நட்சத்திரம் நட்சத்திரம் பின்இரவு 02.01 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 02.01 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 14.02.2023 | Today rasi palan - 14.02.2023

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தூர பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்

இன்று எடுத்த காரியம் வெற்றி பெற சற்று கூடுதல் முயற்சி தேவை. குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் ஏற்படலாம். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

இன்று வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கையிருப்பு சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

தனுசு

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

மீனம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்கள் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001