குறள் : 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
மு.வ உரை :
ஒருவன் கொள்கை தவறினால் அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும் நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
கலைஞர் உரை :
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும் அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்
சாலமன் பாப்பையா உரை :
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
Kural 1019
Kulanjutum Kolkai Pizhaippin Nalanjutum
Naaninmai Nindrak Katai
Explanation :
Want of manners injures ones family; but want of modesty injures ones character.
Horoscope Today: Astrological prediction for February 10, 2023
இன்றைய ராசிப்பலன் - 10.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
10-02-2023, தை 27, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 07.59 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 12.17 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் இரவு 12.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 10.02.2023 | Today rasi palan - 10.02.2023
மேஷம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். செலவுகள் குறையும்.
மிதுனம்
இன்று ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். ஒரு சிலர் பொன் பொருள் வாங்கி மகிழ்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
கன்னி
இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
துலாம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். தொழிலில் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதால் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
தனுசு
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
கும்பம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
மீனம்
இன்று எந்த ஒரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்புகள் ஏற்படும். புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001