குறள் : 1015

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு.


மு.வ உரை :

பிறர்க்கு வரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

கலைஞர் உரை :

தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்

சாலமன் பாப்பையா உரை :

தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.


Kural 1015

Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku

Uraipadhi Ennum Ulaku

Explanation :

The world regards as the abode of modesty him who fear his own and others guilt.


Horoscope Today: Astrological prediction for February 06, 2023


இன்றைய ராசிப்பலன் - 06.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

06-02-2023, தை 23, திங்கட்கிழமை, பிரதமை திதி பின்இரவு 02.19 வரை பின்பு தேய்பிறை துதியை. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 03.03 வரை பின்பு மகம். சித்தயோகம் பகல் 03.03 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. நவகிரக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.


இன்றைய ராசிப்பலன் - 06.02.2023 | Today rasi palan - 06.02.2023

மேஷம்

இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அனுகூலப் பலன் கிட்டும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் நிமித்தமாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உங்கள் ராசிக்கு மாலை 3.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 3.03 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

கும்பம்

இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகலாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சற்று சிரமபட வேண்டியிருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001