ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ரெண்டாடியை சேர்ந்த தீனன் (வயது 51) என்பவர் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-
நான் சோளிங்கர் பணிமனையில் வேலூர் திருத்தணி செல்லும் பஸ்சில் கண்டக்டராக உள்ளேன். டிரைவராக பெருங்காஞ்சியை சேர்ந்த பூபாலன் உள்ளார். 

நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து சோளிங்கர் வழியாக இரவு 9.45 மணிக்கு திருத்தணிக்கு செல்லும் போது சோளிங்கர் பஸ் நிலையத்தில் குடிபோதையில் ஏறிய 3 நபர்கள் பாட்டிகுளம் பகுதியில் செல்லும்போது வெள்ளாத்தூரில் பஸ் நிறுத்த வேண்டும் என கூறினர். 

இது விரைவு பஸ் என்பதால் அங்கு நிற்காது என கூறியதால் அவர்கள் 3 பேரும் என்னையும், டிரைவரையும் ஆபாசமாக திட்டி, பயணிகள் முன்னிலையில் சரமாரியாக அடித்தனர். அந்த 3 மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர் களை தேடி வருகின்றனர்.