நெமிலி அருகே அரக்கோணத்தில் இருந்து சேந்தமங்கலம் சாலை பருவமேடு பகுதியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது தனியார் கம்பெனி பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலையில் கம்பெனி பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் நெமிலி அடுத்த பருவமேடு பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கம்பெனி பஸ் சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இதில், பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி நொறுங்கி முழுவதும் சேதமானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், காயம டைந்தவர்கள் தனியார் பஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து பின்னர் வீடு திரும்பினார்கள்.