ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே 19 வயதுடைய கல்லூரி மாணவி பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் வாலாஜா அரசு கல்லூரியில் பிஏ 2 ம் ஆண்டு படித்துவருகிறார்.
நேற்று முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்திலும், உறவினர் வீட்டிலும் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது பெற்றோர் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சாமி வேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.