ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு தொகுப்பு ஊதியம் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணி இடங்களை தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடந்த 21ம் தேதி வெளியான செய்திக்குறிப்பில் இடைநிலை ஆசிரியர் என்பதற்கு பதிலாக ஆரம்பபள்ளி தலைமை ஆசிரியர் என தவறுதலாக பதிவிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட செய்திக்குறிப்பை ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் என்பதற்கு பதிலான இடைநிலை ஆசிரியர் பணியிடம் என திருத்திய முறையில் புரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.