Actress Anushka gained weight again photo Viral

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் உடல்எடையை கூட்டி நடித்தார். அதன்பிறகு எடையை அவரால் குறைக்க முடிய வில்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. எடையை குறைக்க கடும் உடற்பயிற்சிகள் செய்தார். சிகிச்சையும் பெற்றார். இதன்மூலம் கொஞ்சம் எடையை குறைத்தார்.

சமீபகாலமாக அனுஷ்காவை பொதுநிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் அனுஷ்கா சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வலைத்தளத்தில் வெளியாகிரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதில் அனுஷ்கா உடல் எடை கூடி குண்டாக காணப்படுகிறார்.
அனுஷ்கா தோற்றத்தை பார்த்து சிலர் அவரை உருவக்கேலி செய்து பதிவுகள் வெளியிட்டு உள்ளனர். ஒரு ரசிகர் “அனுஷ்கா பருமனாக இருக்கிறார். அவர் உடல் எடையை குறைத்தால் பழைய அனுஷ்காவை பார்க்க முடியும்” என்று கூறியுள்ளார்.இன்னொருவர் “அனுஷ்காவை பார்க்க வருத்தமாக உள்ளது. ஒல்லியாக மாறுங்கள் உங்களை மீண்டும் திரைப்படங்களில் பார்க்க ஆசைப்படுகிறோம்" என்று கூறி யுள்ளார்.

அனுஷ்காவின் தற்போதைய தோற்றம் இன்னும் சிலர் உடல் எடை கூடினாலும் அனுஷ்கா அழகாகவே இருக்கிறார். அனுஷ்கா யோகா ஆசிரியை உடற்பயற்சி குறித்து அவருக்கு கற்பிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.