👉 1895ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி கணிதவியலாளர் கெய்லி மறைந்தார்.
👉 1823ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ஆங்கிலேய மருத்துவர் மற்றும் அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவருமான எட்வர்ட் ஜென்னர் மறைந்தார்.
👉 1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது.
முக்கிய தினம் :-
இந்திய குடியரசு தினம்
🌸 இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச சுங்க தினம்
🌹 சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு, அதனுடைய முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953ஆம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது. அதில் 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அதன்பின்னர் 160க்கும் மேற்பட்ட சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர். அத்தகைய சுங்க அமைப்பு தொடங்கப்பட்ட ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச சுங்க தினமாக கொண்டாடப்படுகிறது.
பிறந்த நாள் :-
காருல் யோவான்
🌺 சுவீடன், நார்வே மன்னர் காருல் யோவான் 1763ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.
🌺 இவர் சுவீடன் மற்றும் நார்வே நாடுகளின் மன்னராக ஆட்சி புரிந்தவர். இவரது இயற்பெயர் சீன் பெருனதோத்து ஆகும்.
🌺 தென் இத்தாலியில் உள்ள போன்தேகொர்வோவின் முதல் இளவரசர் இவர் தான்.
இவர் தன்னுடைய 81வது வயதில் 1844ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
661 – கடைசி கலீபா அலீயின் படுகொலையுடன் ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1500 – எசுப்பானிய நாடுகாண் பயணி விசென்டே பின்சோன் பிரேசிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1531 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1564 – ஊலா நகரப் போரில் லித்துவேனியா உருசியாவை வென்றது.
1564 – இத்தாலியின் கத்தோலிக்க டிரெண்ட் பேரவை கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றிற்கிடையேயான அதிகாரபூர்வமான வேறுபாட்டை வரையறுத்தது.
1565 – விஜயநகரப் பேரரசுக்கும் இசுலாமிய தக்காண சுல்தான்களுக்கும் இடையே இடம்பெற்ற தலைக்கோட்டை சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இசுலாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
1700 – வட அமெரிக்காவின் மேற்குக் கரையில் 8.7–9.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
1788 – ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
1837 – மிச்சிகன் அமெரிக்காவின் 26-வது மாநிலமாக இணைந்தது.
1838 – அமெரிக்காவில் டென்னிசி முதலாவது மாநிலமாக மதுவிலக்கை அமுல் படுத்தியது.
1841 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
1905 – 3,106.75 கரட் (0.621350 கிகி) எடையுள்ள கலினன் என்ற உலகின் மிகப்பெரிய வைரம் தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1924 – சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1926 – ஜான் லோகி பைர்டு முதலாவது தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 சனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாளாக) அறிவித்தது. இது 17 ஆண்டுகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1934 – செருமனிக்கும், போலந்துக்கும் இடையே அமைதி உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: இத்தாலியின் உதவியுடன் பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு ஆதரவான படைகள் பார்செலோனாவைக் கைப்பற்றின.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.
1950 – இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.
1952 – பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் அழிந்தது.
1962 – ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.
1965 – இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
1980 – இசுரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1986 – தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
1991 – சோமாலியாவில் சியாத் பாரியின் அரசு கலைக்கப்பட்டது.
1992 – உருசியாவின் அணுவாயுத ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அரசுத்தலைவர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.
2001 – குஜராத்தில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2015 – எசுப்பானியாவில் வான்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1667 – என்றிக் சுவார்டெக்குரூன், டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் ஆளுநர், யாழ்ப்பாணம் கட்டளை அதிகாரி (இ. 1728)
1763 – காருல் யோவான், சுவீடன் நோர்வே அரசர் (இ. 1844)
1880 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்க இராணுவத் தளபதி (இ. 1964)
1892 – பெசி கோல்மன், அமெரிக்க விமானி (இ. 1926)
1917 – சி. டி. ராஜகாந்தம், தமிழக நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகை (இ. 1999)
1921 – சித்திரசேன, இலங்கை நடனக் கலைஞர் (இ. 2005)
1921 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர், சோனி நிறுவனர் (இ. 1999)
1924 – மணியம், தமிழக ஓவியர் (இ. 1968)
1937 – வீரபாண்டி எஸ். ஆறுமுகம், தமிழக அரசியல்வாதி (இ. 2012)
1944 – அஞ்செலா டேவிசு, அமெரிக்கச் செயற்பாட்டாளர்
1956 – பி. சி. ஸ்ரீராம், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
1956 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)
1958 – எல்லேன் டிஜெனிரெஸ், அமெரிக்க நடிகை
1966 – அனிதா நாயர், ஆங்கிலப் புதின எழுத்தாளர், கவிஞர்
1968 – ரவி தேஜா, இந்திய நடிகர்
இன்றைய தின இறப்புகள்
1823 – எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், கண்டுபிடிப்பாளர் (பி. 1749)
1891 – நிக்கோலஸ் ஓட்டோ, செருமானியப் பொறியியலாளர், உள் எரி பொறியைக் கண்டுபிடித்தவர் (பி. 1833)
1895 – ஆர்தர் கெய்லி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1825)
1903 – வில்லியம் ஸ்கீன், ஆங்கிலேய-இலங்கை நூலாசிரியர் (பி. 1847)
1946 – அதிரியான் வான் மானன், இடச்சு-அமெரிக்க வானியலாளர் (பி. 1884)
1954 – எம். என். ராய், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், புரட்சியாளர் (பி. 1887)
1963 – நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், தமிழகத் தவில் கலைஞர் (பி. 1929)
1964 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (பி. 1886)
1990 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1895)
2008 – ஜோர்ஜ் அபாசு, பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)
2010 – சாயி, இந்திய நடனக் கலைஞர்
2010 – ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1925)
2012 – பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி, புதுச்சேரி முதலமைச்சர் (பி. 1937)
2015 – ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)
இன்றைய தின சிறப்பு நாள்
குடியரசு நாள் (இந்தியா)
ஆஸ்திரேலியா நாள் (ஆத்திரேலியா)
விடுதலை நாள் (உகாண்டா)