👉 2015ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் மறைந்தார்.
👉 1857ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம் கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.
முக்கிய தினம் :-
தேசிய பெண் குழந்தைகள் தினம்
🌟 இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மறைந்த பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார். அந்த நாள் 2009ஆம் ஆண்டிலிருந்து தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தேசிய கீதம் அறிவிக்கப்பட்ட தினம்
🌹 தாகூர் அவர்களால் இயற்றப்பட்ட தேசிய கீதம் (ஜன கண மன) முதன்முறையாக 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. சுதந்திரமடைந்து 3 ஆண்டுகளுக்கு பின்னரே, அதாவது 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நினைவு நாள் :-
ஹோமி ஜஹாங்கீர் பாபா
🌟இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.
🌟இவருக்கு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது(1954). இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967 முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்(டீhயடிhய யுவழஅiஉ சுநளநயசஉh ஊநவெசந) எனப் பெயரிடப்பட்டது.
🌟அமெரிக்காவில், 1942ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாடாவுக்கு கடிதம் எழுதினார். அதன்பின் அங்கு ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டு, அதன் இயக்குநராக ஹோமி பாபா பொறுப்பேற்றார்.
🌟அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஜஹாங்கீர் ஹோமி பாபா தனது 56வது வயதில் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மறைந்தார்.
பிறந்த நாள் :-
சி.பி.முத்தம்மா
🌷 இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் அதிகாரி சி.பி.முத்தம்மா 1924ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தார்.
🌷 இவர் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆண், பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் என சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இந்த பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.
🌷 வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்று அறிவித்து, இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும் தீர்ப்பு கூறினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு சட்டத்தை திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.
🌷 நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். 33 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் தனது 85வது வயதில் (2009) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
914 – எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது.
1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார்.
1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார்.
1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார்.
1742 – ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1835 – பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1857 – கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.
1862 – புக்கரெஸ்ட் உருமேனியாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
1887 – அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.
1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.[2]
1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.
1916 – நடுவண் அரசின் வருமான வரி சட்டபூர்வமானது என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1918 – கிரெகோரியின் நாட்காட்டி உருசியாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
1924 – உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த பாங்காக் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.
1961 – இரண்டு H-குண்டுகளை ஏற்றிச் சென்ற குண்டு-வீச்சு விமானம் ஒன்று வட கரொலைனாவில் நடுவானில் இரண்டாகப் பிளந்தது. ஐதரசன் குண்டு ஒன்றின் யுரேனியம் கருவம் காணாமல் போனது.
1966 – ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் உயிரிழந்தனர்.
1968 – வியட்நாம் போர்: ஆத்திரேலியாவின் முதலாவது சிறப்புப் பணிப்பிரிவு வட வியட்நாம் இராணுவம், மற்றும் வியட்கொங் மீது தாக்குதலக்ளை ஆரம்பித்தது.
1972 – இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன சப்பானியப் படைவீரன் சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் மறைந்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.
1978 – கொசுமசு 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.
1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.
1986 – வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.
1990 – சப்பான் ஐட்டென் என்ற தனது முதலாவது நிலவுச்சலாகையை ஏவியது.
1996 – மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.
2006 – இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
2007 – சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.
2009 – இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார். இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
2009 – பிரான்சு, பொர்தோ அருகில் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்,.
2011 – மாஸ்கோவின் தமதேதவோ வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய தின பிறப்புகள்
1882 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (இ. 1968)
1915 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1984)
1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் (இ. 2010)
1924 – சி. பி. முத்தம்மா, இந்திய சிப்பாய், சாதனையாளர் (இ. 2009)
1924 – கர்ப்பூரி தாக்கூர், பீகார் மாநில முதலமைச்சர் (இ. 1988)
1941 – தான் செட்சுமன், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய வேதியியலாளர்
1947 – மிசியோ காகு, அமெரிக்க இயற்பியலாளர்
1953 – மூன் சே-இன், தென் கொரியாவின் 19-வது அரசுத்தலைவர்
1981 – ரியா சென், இந்திய நடிகை
இன்றைய தின இறப்புகள்
41 – காலிகுலா, உரோமைப் பேரரசர் (பி. 12)
817 – நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 770)
1914 – டேவிட் கில், இசுக்காட்டிய வானியலாளர் (பி. 1843)
1965 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)
1966 – ஓமி பாபா, இந்திய இயற்பியலாளர் (பி. 1909)
2006 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கை ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1970)
2011 – பீம்சென் ஜோஷி, இந்தியப் பாடகர் (பி. 1922)
2012 – சுகுமார் அழீக்கோடு, இந்திய எழுத்தாளர் (பி. 1926)
2015 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)
இன்றைய தின சிறப்பு நாள்
இணைப்பு நாள் (உருமேனியா)
தேசிய பெண் குழந்தை நாள் (இந்தியா)