👉 இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு : அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், 1968ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
நினைவு நாள் :-
எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
👉பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.
👉இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார். தனி வயலின் கச்சேரிகளை 50 ஆண்டுகாலம் நடத்தி வந்தார்.
👉இவர் பாரூர் - எம்எஸ்ஜி ஸ்டைல் என்ற புதிய பாணியை அறிமுகம் செய்தார். பத்மபூஷண், பத்மஸ்ரீ, கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, டி.சவுடையா விருது, வயலின் வாத்திய சாம்ராட், வயலின் வாத்திய சக்ரவர்த்தி, சப்தகிரி சங்கீத வித்வமணி போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
👉உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி இசைப் பிரியர்களால் 'எம்எஸ்ஜி' என பாசத்துடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி 81வது வயதில் மறைந்தார்.
பிறந்த நாள் :-
வீரபாண்டிய கட்டபொம்மன்
🌟 ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 03ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.
🌟 பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை.
🌟 1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார்.
🌟 ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வௌ;வேறு இடங்களுக்கு வரச் சொல்லிய ஜாக்ஸன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.
🌟 இந்த சந்திப்பின்போது வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள்.
🌟 இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன் என கம்பீரத்துடன் முழங்கிய இவர் 1799ஆம் ஆண்டு கயத்தாறில் 39வது வயதில் அக்டோபர் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
வேலு நாச்சியார்
🌷 தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார் 1730ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் பிறந்தார்.
🌷 இவர் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார்.
🌷 வடுகநாதர் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்து மன்னர் வடுகநாதரை தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை கைப்பற்றி விட்டார்கள்.
🌷 பிறகு ராணி சின்ன மருது, பெரிய மருது தளபதிகளின் துணையோடு தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார். சில ஆண்டுகாலம் கழித்து ஆங்கிலேயரை தாக்க உரிய நேரம் பார்த்து வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தி, கோட்டையைக் கைப்பற்றினர்.
🌷 சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான். ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார்.
🌷 இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் தனது 66வது வயதில் மறைந்தார்.
சாவித்ரிபாய் புலே
🌸 சமூக சீர்திருத்தவாதியும், கவிஞருமான சாவித்ரிபாய் புலே 1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ;டிரா மாநிலம் சதாரா மாவட்டத்திலுள்ள நைகான் என்ற சிற்றூரில் பிறந்தார்.
🌸 இவர் தன்னுடைய கணவருடன் இணைந்து பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டார். 1846-ல் பெண்கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவினார். பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1852-ல் மஹிளா சேவா மண்டலை தொடங்கினார்.
🌸 தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். கணவரின் மறைவுக்குப் பிறகும், சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.
🌸 இவர் சிறந்த கவிஞரும்கூட. 1892-ல் கவிதை நூலை வெளியிட்டார். இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை என அனைத்து களங்களிலும் கவிதைகள் எழுதி தனிமுத்திரை பதித்தார். இவர் தன்னுடைய 66வது வயதில் (1897) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
👉1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
👉1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை.
👉1521 – திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார்.
👉1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.
👉1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.
👉1777 – பிரின்ஸ்டன் சமரில் அமெரிக்கத் தளபதி சியார்ச் வாசிங்டன் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவைத் தோற்கடித்தார்.
👉1815 – ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் உருசியாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.
👉1833 – போக்லாந்து தீவுகள் மீது பிரித்தானியா உரிமை கோரியது.
👉1848 – லைபீரியாவின் முதல் அரசுத்தலைவராக யோசப் யென்கின்சு ராபர்ட்சு பதவியேற்றார்.
👉1859 – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
👉1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.
👉1870 – புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
👉1888 – 91 சமீ யேம்சு லிக் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் பயன்படுத்தப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் முறிவுத் தொலைநோக்கி ஆகும்.
👉1911 – உருசிய துர்க்கெசுத்தானின் அல்மாத்தி நகரை 7.7 அளவு நிலநடுக்கம் தாக்கி அழித்தது.
👉1919 – பாரிசு அமைதி மாநாட்டில், ஈராக் அமீர் முதலாம் பைசல், சியோனிசத் தலைவர் சைம் வெயிசுமன் உடன் பலத்தீனத்தில் யூதப் பகுதியை அமைக்க உடன்பட்டார்.
👉1921 – துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.
👉1924 – பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.
👉1925 – இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக பெனிட்டோ முசோலினி அறிவித்தார்.
👉1932 – ஒந்துராசில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
👉1932 – பிரித்தானிய ஆட்சியாளர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.
👉1947 – அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
👉1956 – ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.
👉1957 – முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.
👉1958 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
👉1959 – அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.
👉1961 – பனிப்போர்: கியூபா அமெரிக்கச் சொத்துகளைத் தேசியமயமாக்கியதை அடுத்து அமெரிக்க அரசு அந்நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது.
👉1961 – இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
👉1962 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) பிடல் காஸ்ட்ரோவை மதவிலக்கு செய்து அறிவித்தார்.
👉1966 – இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தாசுகெண்டில் ஆரம்பமாயின.
👉1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
👉1976 – அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
👉1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.
👉1990 – பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
👉1993 – மாஸ்கோவில் அமெரிக்கத் தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் போர்த்தந்திர படைக்கலக் குறைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
👉1994 – முன்னாள் இனவொதுக்கல் தாயகங்களில் இருந்து ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் தென்னாப்பிரிக்காவின் குடியுரிமையைப் பெற்றனர்.
👉1994 – உருசியாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
👉1995 – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
👉2002 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் படைகள் செங்கடலில் 50 தொன் எடையுள்ள ஆயுதங்களுடன் பாலத்தீன சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றின.
👉2004 – எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் உயிரிழந்தனர்.
👉2015 – போகோ அராம் போராளிகள் வட-கிழக்கு நைஜீரியாவில் பாகா நகரைக் கைப்பற்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர்.
👉2016 – சியா மதகுரு நிம்மர்-அல்-நிம்மர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் சவூதி அரேபியாவுடனான தூதரக உறவைத் துண்டித்தது.
இன்றைய தின பிறப்புகள்
👉கிமு 106 – சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. கிமு 43)
👉1753 – பழசி இராசா, கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னர் (இ. 1805)
👉1760 – கட்டபொம்மன், பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799)
👉1793 – லுக்ரிடியா மோட், அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1880)
👉1831 – சாவித்ரிபாய் புலே, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1897)
👉1840 – தந்தை தமியான், மதப்பரப்புனர் (இ. 1889)
👉1863 – சுவாமி துரியானந்தர், இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர், துறவி (இ. 1922)
👉1883 – கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1967)
👉1892 – ஜே. ஆர். ஆர். டோல்கீன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1973)
👉1906 – வில்லியம் வில்சன் மார்கன், அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. 1994)
👉1920 – அப்பாஸ் அலி, இந்திய தேசிய ராணுவ வீரர் (இ. 2014)
👉1925 – புஷ்பவல்லி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1991)
👉1929 – செர்சோ லியோனி, இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1989)
👉1930 – ஐ. எஸ். முருகேசன், தமிழ்த் திரைப்பட நடிகர், மோர்சிங் இசைக் கலைஞர் (இ. 2014)
👉1945 – நாராயணசாமி சீனிவாசன், இந்திய தொழிலதிபர்
👉1953 – முகமது வாகித் அசன், மாலைத்தீவின் 5வது அரசுத்தலைவர்
👉1956 – மெல் கிப்சன், அமெரிக்க-ஆத்திரேலிய நடிகர்
👉1966 – செட்டன் சர்மா, இந்தியத் துடுப்பாளர்
👉1969 – மைக்கேல் சூமாக்கர், செருமானிய பார்முலா 1 வீரர்
👉1976 – நிக்கோலஸ் கோன்சலேஸ், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
👉1990 – சைந்தவி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகி, பின்னணிப் பாடகி
இன்றைய தின இறப்புகள்
👉236 – அந்தேருஸ் (திருத்தந்தை)
👉1641 – செருமையா அராக்சு, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1618)
👉1795 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (பி. 1730)
👉1871 – குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, இந்திய மதகுரு, புனிதர் (பி. 1805)
👉1972 – பொ. வே. சோமசுந்தரனார், தமிழக உரையாசிரியர்; நாடகாசிரியர் (பி. 1909)
👉1992 – ஓ. வி. அழகேசன், தமிழக அரசியல்வாதி (பி. 1911)
👉1997 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1917)
👉2002 – சதீஷ் தவான், இந்தியப் பொறியாளர் (பி. 1920)
👉2013 – எம். எஸ். கோபாலகிருஷ்ணன், இந்திய வயலின் கலைஞர் (பி. 1931)
👉2014 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1954)
👉2018 – அ. சிவானந்தன், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர், சமூக, அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1923)
இன்றைய தின சிறப்பு நாள்
👉1966 புரட்சி நினைவு நாள் (புர்க்கினா பாசோ)