ராணிப்பேட்டை மாவட்டம் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35) கட்டிடவேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காவேரிப்பாக்கம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் அவர் மீது மோதியது.
இதில் ஆறுமுகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ஆறுமுகத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். ஆறுமுகத்தின் கல்லீரல் மற்றும் கண்கள் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் இதயம், கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும் தானமாக பெறப்பட்டது.
ஆறுமுகத்திற்கு ரேவதி என்ற மனைவி, நிவேதா (14) என்ற மகள் பரத் (11) என்ற மகன் உள்ளனர்.