Private sector employment camp on 20th in Ranipet district

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்மாதம் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதமும் 3ம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 

அதன்படி, இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் 20ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பி.இ படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேற்காணும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20ம் தேதி காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் அதில் கூறப்பட்டிருந்தது.