Power outage in Ichiputhur area
அரக்கோணம் மின் கோட்டம் சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான் பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதே போன்று புதன்கிழமை காலை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர் துணை நிலையத்திற்கு உட்பட்ட இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகை போளூர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம் பாக்கம், வளர்புரம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங் களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை அரக்கோணம் மின் கோட்ட செயற்பொ றியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.