Merchant went for a walk in the morning died suddenly due to Heart attack 

ராணிப்பேட்டை புளித் தெருவைச் சேர்ந்தவர் பஷீர் (37). இவருக்கு மனைவி, 1 மகன் உள்ளனர். சேமியா விற்பனை செய்யும் வியாபாரியான இவர் தினசரி காலையில் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதேபோல், நேற்று காலையும் வழக்கம்போல் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில், மயங்கி விழுந்த அவரை பின்னால் நடைப்பயிற்சி மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட ஏடிஎஸ்பி விஸ்வேஷ்வரைய்யா உடனடியாக பஷீரை மீட்டு மாவட்ட ஆயுதப்படை வேனில் ஏற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், மருத்துவ மனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டாதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.