ராணிப்பேட்டையில் சுடுகாடு அருகே ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை காரை சுடுகாடு அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் இருக்குமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.