குறள் : 1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
மு.வ உரை :
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.
கலைஞர் உரை :
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
சாலமன் பாப்பையா உரை :
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.
Kural 1008
Nachchap Pataadhavan Selvam Natuvoorul
Nachchu Marampazhuth Thatru
Explanation :
The wealth of him who is disliked (by all) is like the fruitbearing of the etty tree in the midst of a town.
Horoscope Today: Astrological prediction for January 30, 2022
இன்றைய ராசிப்பலன் - 30.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
30-01-2023, தை 16, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 10.12 வரை பின்பு வளர்பிறை தசமி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 10.15 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் இரவு 10.15 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. தை கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 30.01.2023 | Today rasi palan - 30.01.2023
மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை சிரமபட்டு முடிக்க நேரிடும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.
மிதுனம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம்
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் இருந்தாலும் அதற்குக்கேற்ப லாபம் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
துலாம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
தனுசு
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
மகரம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கொடுத்த கடன் வசூலாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் தேக்க நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001