குறள் : 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்.


மு.வ உரை :

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

கலைஞர் உரை :

அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?

சாலமன் பாப்பையா உரை :

தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.


Kural 1001

Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan

Seththaan Seyakkitandhadhu Il

Explanation :

He who does not enjoy the immense riches he has heaped up in his house is (to be reckoned as) dead (for) there is nothing achieved (by him).


Horoscope Today: Astrological prediction for January 23 2022



இன்றைய ராசிப்பலன் - 23.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


23-01-2023, தை 09, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 06.43 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் இரவு 12.26 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 23.01.2023 | Today rasi palan - 23.01.2023

மேஷம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

இன்று பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.51 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கடகம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 01.51 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன்கள் குறையும். பொருளாதார தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ-னுகூலம் உண்டாகும்.

துலாம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். கடன்கள் குறையும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் உற்சாகமின்றி செயல்படுவீர்கள். சிலருக்கு வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக கொடுத்த கடன் வசூலாகும்.

மகரம்

இன்று குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள். 

மீனம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001