குறள் : 995
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
மு.வ உரை :
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும் பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
கலைஞர் உரை :
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்
சாலமன் பாப்பையா உரை :
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.
Kural 995
Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum
Panpula Paatarivaar Maattu
Explanation :
Reproach is painful to one even in sports those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.
Horoscope Today: Astrological prediction for January 16 2022
இன்றைய ராசிப்பலன் - 16.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
16-01-2023, தை 02, திங்கட்கிழமை, நவமி திதி இரவு 07.20 வரை பின்பு தேய்பிறை தசமி. சுவாதி நட்சத்திரம் இரவு 07.23 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 07.23 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் -1. ஜீவன் - 1/2. மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கோ பூஜைக்கு மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மதியம் 3 .00 மணி முதல் 4.00 மணி வரை, மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை. கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 16.01.2023 | Today rasi palan - 16.01.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். நெருங்கியவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
கடகம்
இன்று நீங்கள் திட்டமிட்ட காரியம் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். திருமண பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.
சிம்மம்
இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
துலாம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் பெண்களுக்கு வேலைபளு குறையும். பொன் பொருள் சேரும். புதிய முயற்சிகள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
விருச்சிகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். பயணங்கள் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். மாற்று கருத்துடையவர் மனம் மாறுவர். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
மகரம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்று கடன் பிரச்சினைகள் குறையும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமான பலனை கொடுக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001