குறள் : 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து.


மு.வ உரை :

புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

கலைஞர் உரை :

சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்

சாலமன் பாப்பையா உரை :

பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.


Kural 1010

Seerutaich Chelvar Sirudhuni Maari

Varangoorn Thanaiyadhu Utaiththu

Explanation :

The shortlived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).


Horoscope Today: Astrological prediction for February 01, 2023


இன்றைய ராசிப்பலன் - 01.02.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

01-02-2023, தை 18, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.02 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 03.23 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00


இன்றைய ராசிப்பலன் - 01.02.2023 | Today rasi palan - 01.02.2023


மேஷம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வேலையில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.59 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை மதியம் வரை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு பகல் 01.59 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது, தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

தனுசு

இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு அதிக பணிச்சுமை காரணமாக மன அமைதி குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் வகையில் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர செலவை குறைப்பது நல்லது.

மீனம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001