தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பல் வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இப்பயிற்சியினை பெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதமாகும். அனைத்து செலவுகளும் தாட்கோவால் வழங்கப்படும்.

தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். தகுதியுள்ள ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com  இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.