Complaints can be made if there are defects in receiving the Pongal gift package in Tamilnadu Ranipettai District


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3,44,679 மொத்த அரிசி குடும்ப அட்டைதாரர்களும், முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்ப அட்டை 376 குடும்பங்களும், சிறப்பாகக் கொண்டாட பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1,000 வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தினை 09 ஜனவரி 2023 முதல் - அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னர் வரை வழங்கப்படும்.

மேலும் ரேசன் கடைகளில் சுழற்சி முறையில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 3.1.2023 முதல் 8.1.2023 வரை வீடு தோறும் சென்று ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.

குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவர் வந்தாலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்கள் வாங்கச் செல்ல வேண்டும்.

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடன் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04172-2271766-க்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.