டாக்டர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ஜீவன் கிரோஷ் (வயது 29). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வேலூரில் இருந்து ஆற்காடு நோக்கி காரில் சென்று கொண் டிருந்தார். ரத்தினகிரியை அடுத்த அரம்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.
காரை ஓட்டி வந்த ஜீவன் கிரோஷ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் காருக்குள் சுய நினைவின்றி கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்க முயன்றனர். கார் கதவை திறக்க முடியாததால் கடப்பாரையைக் கொண்டு கார் கதவை உடைத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரத்தினகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.