ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் சொந்தமாக விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 75 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 1 விவசாயிக்கு 75 லட்சம் வீதம் 3 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 15 லட்சம் மானியமும், ஒரு பழங்குடியினர் விவசாயிக்கு 75 லட்சம் மானியம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க. 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலமாக இருக்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாது பிற இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், வாங்கப்படும் விவசாய நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேற்கண்ட இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www. tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.