குறள் : 1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
மு.வ உரை :
சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.
கலைஞர் உரை :
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்
சாலமன் பாப்பையா உரை :
மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.
Kural 1003
Eettam Ivari Isaiventaa Aatavar
Thotram Nilakkup Porai
Explanation :
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.
Horoscope Today: Astrological prediction for January 25 2022
இன்றைய ராசிப்பலன் - 25.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
25-01-2023, தை 11, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.05 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் இரவு 08.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். வஸந்த பஞ்சமி. விநாயகர் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 25.01.2023 | Today rasi palan - 25.01.2023
மேஷம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
ரிஷபம்
இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 2.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 2.29 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கடன் பிரச்சினைகள் குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வேலையாட்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தனுசு
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
மகரம்
இன்று பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோக ரீதயான பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.
கும்பம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.
மீனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். புதிய முயற்சிகளில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001