குறள் : 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
மு.வ உரை :
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால் சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
கலைஞர் உரை :
தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?
சாலமன் பாப்பையா உரை :
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?
Kural 987
Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal
Enna Payaththadho Saalpu
Explanation :
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?
Horoscope Today: Astrological prediction for January 08 2022
இன்றைய ராசிப்பலன் - 08.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
08-01-2023, மார்கழி 24, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி காலை 07.07 வரை பின்பு தேய்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் பின்இரவு 06.05 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 08.01.2023 | Today rasi palan - 08.01.2023
மேஷம்
இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கடகம்
இன்று குடும்பத்தில் இனிய நிகழ்ச்சிகள் நிகழும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.
சிம்மம்
இன்று பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
தனுசு
இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கும்பம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்களால் மன அமைதி குறையும். வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை உண்டாகும். தூர பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001