குறள் : 982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
மு.வ உரை :
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
கலைஞர் உரை :
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல
சாலமன் பாப்பையா உரை :
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
Kural 982
Kunanalam Saandror Nalane Piranalam
Ennalaththu Ulladhooum Andru
Explanation :
The only delight of the perfect is that of their goodness all other (sensual) delights are not to be included among any (true) delights.
Horoscope Today: Astrological prediction for January 03 2022
இன்றைய ராசிப்பலன் - 03.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
03-01-2023, மார்கழி 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 10.02 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.26 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 04.26 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்திகை விரதம். (வாக்கியம்) முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 03.01.2023 | Today rasi palan - 03.01.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாகலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் பொறுப்புடன் நடந்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்த்து எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பால் அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். பெற்றோர் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உங்களுக்கு இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஓரளவு சேமிக்க முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிட்டும்.
மீனம்
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001