குறள் : 993

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.


மு.வ உரை :

உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

கலைஞர் உரை :

நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்

சாலமன் பாப்பையா உரை :

உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.


Kural 993

Uruppoththal Makkaloppu Andraal Veruththakka

Panpoththal Oppadhaam Oppu

Explanation :

Resemblance of bodies is no resemblance of souls true resemblance is the resemblance of qualities that attract.


Horoscope Today: Astrological prediction for January 14 2022



இன்றைய ராசிப்பலன் - 14.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

14-01-2023, மார்கழி 30, சனிக்கிழமை, சப்தமி திதி இரவு 07.23 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 06.14 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. போகிப் பண்டிகை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 14.01.2023 | Today rasi palan - 14.01.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப செய்திகள் வந்து சேரும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கடன்கள் குறையும்.

துலாம்

இன்று உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு மனக்குழப்பங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

இன்று உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001