👉 1947ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிரான்சிஸ்டர், பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
👉 1958ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது.
👉 1954ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
👉 2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒன்பதாவது இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மறைந்தார்.
👉 2013ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாசுனிக்கோவ் மறைந்தார்.
👉 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைந்தார்.
முக்கிய தினம் :-
இந்திய விவசாயிகள் தினம்
🌾 இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
🌾 உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
🌾 இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். இந்தியாவில் இன்றும் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.
நினைவு நாள் :-
பி.கக்கன்
👉 விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் (P.Kakkan) 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.
👉 இவர் அரசியல் அமைப்பு சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
👉 இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் அணைகள், இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன. இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
👉 எளிமையின் சின்னமாகவும், பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த பி.கக்கன் 73வது வயதில் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மறைந்தார்.
பிறந்த நாள் :-
சரண் சிங்
🏁 இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் திரு.சரண் சிங் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் பிறந்தார்.
🏁 சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு இவர் 1950ஆம் ஆண்டு, ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் உழடடநஉவiஎளைவ நில பயன்பாடு கொள்கைகளுக்கு எதிரான போரில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
🏁 மேலும் இவர் வருவாய், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், நீதி, தகவல், வேளாண்மை ஆகிய பல துறைகளில் பணிபுரிந்துள்ளார். காங்கிரஸ் பிரிந்தபோது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 1967ஆம் ஆண்டு முதல்முறையாக உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார்.
🏁 எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திரு.சௌத்ரி சரண் சிங் தனது ஓய்வு நேரத்தில் ஜமீன்தாரி முறை ஒழிப்பு, கூட்டுறவு பண்ணை முறை, இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும், வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
🏁 லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கிய சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி தனது 84வது வயதில் மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
👉562 – கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது.
👉962 – அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது.
👉1572 – செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார்.
👉1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார்.
👉1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
👉1876 – கான்ஸ்டண்டினோபில் மாநாட்டின் ஆரம்ப நாளில் பால்கன் குடாவில் அரசியல் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காணப்பட்டது.
👉1914 – முதலாம் உலகப் போர்: ஆத்திரேலிய, நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
👉1916 – முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றன.
👉1941 – இரண்டாம் உலகப் போர்: 15 நாட்கள் சண்டைக்குப் பின்னர் சப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.
👉1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
👉1948 – ஏழு சப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
👉1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
👉1958 – டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
👉1968 – வட கொரியாவில் 11 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 82 அமெரிக்க மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
👉1970 – நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரம் உலகின் மிக உயர்ந்த கட்டடமாக அறிவிக்கப்பட்டது.
👉1970 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு அதிகாரபூர்வமாக ஒரு-கட்சி நாடாக மாறியது.
👉1972 – நிக்கராகுவா தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 10,000 இற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
👉1972 – தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
👉1979 – ஆப்கான் சோவியத் போர்: சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
👉1986 – எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
👉1990 – 88% சுலோவீனிய மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
👉2003 – சீனாவின் சோங்கிங்கில் இடம்பெற்ற இயற்கை வாயு வெடி விபத்தில் 234 பேர் உயிரிழந்தனர்.
👉2005 – அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
👉2005 – சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
👉2007 – நேபாள இராச்சியம் கலைக்கப்பட்டு குடியரசாக மாறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. பிரதமர் அரசுத்தலைவரானார்.
இன்றைய தின பிறப்புகள்
👉1722 – ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட், சுவீடன் கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1765)
👉1777 – முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (இ. 1825)
👉1805 – இரண்டாம் யோசப்பு இசுமித்து, அமெரிக்க மதத் தலைவர் (இ. 1844)
👉1807 – அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (இ. 1870)
👉1867 – மேடம் சி. ஜே. வாக்கர், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1919)
👉1902 – சரண் சிங், 5வது இந்தியப் பிரதமர் (இ. 1987)
👉1912 – அன்னா ஜேன் ஆரிசன், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1998)
👉1922 – அரோல்டு மாசுர்சுகி, அமெரிக்கப் புவியியலாளர், வானியலாளர் (இ. 1990)
👉1933 – அக்கிகித்தோ, சப்பானியப் பேரரசர்
👉1938 – பாபு கான், அமெரிக்கக் கணினி அறிவியலாளர், பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறையைக் கண்டுபிடித்தவர்
👉1940 – மம்நூன் உசைன், பாக்கித்தானின் 12-வது அரசுத்தலைவர்
👉1948 – ஜான் பீட்டர் அக்ரா, அமெரிக்க வானியலாளர் (இ. 2010)
👉1958 – அனிதா பிரதாப், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர்
👉1962 – இசுடீபன் எல், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க வேதியியலாளர்
👉1967 – கார்லா புரூனி, இத்தாலிய-பிரான்சிய பாடகி
👉1981 – ராதிகா சிற்சபையீசன், இலங்கை-கனடிய அரசியல்வாதி
இன்றைய தின இறப்புகள்
👉1834 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளியலாளர் (பி. 1766)
👉1907 – பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர் (பி. 1824)
👉1952 – சா. தர்மராசு சற்குணர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1877)
👉1959 – இர்வின் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1881)
👉1973 – ஜெரார்டு குயூப்பர், டச்சு-அமெரிக்க வானியலாளர், கோள் அறிவியலாளர் (பி. 1905)
👉1981 – பி. கக்கன், இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1908)
👉2004 – பி. வி. நரசிம்ம ராவ், 9வது இந்தியப் பிரதமர் (பி. 1921)
👉2010 – கே. கருணாகரன், கேரளாவின் 7வது முதலமைச்சர் (பி. 1918)
👉2013 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியப் பொறியாளர் (பி. 1919)
👉2014 – கே. பாலச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குனர் (பி. 1930)
👉2014 – கூத்தபிரான், தமிழக நாடகக் கலைஞர் (பி. 1932)
இன்றைய தின சிறப்பு நாள்
👉குழந்தைகள் நாள் (தெற்கு சூடான், சூடான்)
👉தேசிய உழவர் நாள் (இந்தியா)