✍ 1979ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர், தியான் சந்த் மறைந்தார்.
முக்கிய தினம் :-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
🌟 மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும், டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பிறந்த நாள் :-
பாபு இராஜேந்திர பிரசாத்
🌹 இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர்.
🌹 புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற ராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது ராஜேந்திர பிரசாத் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
🌹 இந்தியக் குடியரசை செம்மையாக வழிநடத்திய இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இந்திய குடியரசுத் தலைவர் பதவியை இரண்டு முறை வகித்த பெருமைக்குரிய டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத் தனது 78வது வயதில் (1963) மறைந்தார்.
குதிராம் போஸ்
🌻 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் 1889ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வங்காளத்தின் மிதினாப்பூர் மாவட்டம் ஹபிப்பூர் கிராமத்தில் பிறந்தார். விடுதலை இயக்கத்தின் ஆசானாக விளங்கியவர்களின் சொற்பொழிவுகளில் கவர்ந்த இவர் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார்.
🌻 இவர் விடுதலை வீரர்களுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்ட்டின், வாகனத்தின் மீது குண்டு வீசினார். ஆனால், எதிர்பாராத விதமாக அதில் பயணம் செய்த அவரது மனைவியும், மகளும் இறந்தனர்.
🌻எனவே, ஆங்கில அரசு இவருக்கு தூக்குத்தண்டனை (1908) விதித்தது. அப்போது அவரின் வயது 18. கையில் பகவத் கீதையுடனும், வந்தே மாதரம் முழக்கத்துடனும் இந்த மாவீரனின் உயிர் பிரிந்தது.
ரோலண்ட் ஹில்
🍀 நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் 1795ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அப்பொழுது தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ஃபோர் பென்னி போஸ்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது.
🍀 இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலை பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்த ரோலண்ட் ஹில் தனது 83வது வயதில் (1879) மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.[1][2]
1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.[1]
1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன.
1818 – இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது.
1854 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
1903– சேர் என்றி பிளேக் பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக நியமனம் பெற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.[1]
1904 – வியாழனின் நிலா இமாலியா கலிபோர்னியாவின் லிக் வான்காணகத்தில் சார்ல்சு பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1910 – நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.
1912 – பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்காரியா, கிரேக்கம், மொண்டெனேகுரோ, செர்பியா ஆகியன உதுமானியப் பேரரசுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. 1913 பெப்ரவரி 3 இல் போர் மீண்டும் தொடங்கியது.
1919 – 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இரு தடவைகள் பாலம் இடிந்து வீழ்ந்து 89 பேர் உயிரிழந்திருந்தனர்.
1927 – முதலாவது லாரல் மற்றும் ஹார்டி திரைப்படம் வெளியிடப்பட்டது.
1944 – கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
1959 – சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் சிங்கப்பூரின் தற்போதைய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறித்தியான் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை 53 வயது லூயிசு வாசுகான்சுக்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
1973 – வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1976 – ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
1978 – வர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
1979 – அயத்தொல்லா ரூகொல்லா கொமெய்னி இரானின் உயர் தலைவரானார்.
1984 – போபால் பேரழிவு: இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1989 – பனிப்போர்: மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
1992 – 80,000 தொன் பாறை எண்ணெயுடன் சென்ற கிரேக்கக் கப்பல் எசுப்பானியா அருகில் மூழ்கியதில் எண்ணெய் முழுவதும் கடலில் கசிந்தது.
1992 – உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.
1994 – பிளேஸ்டேசன் சப்பானில் வெளியிடப்பட்டது.
1997 – நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவதத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, உருசியா, சீனா தவிர்ந்த 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டன.
1999 – செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட மார்சு தரையிறங்கியின் தொடர்புகளை நாசா நிறுவனம் அவ்விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அணுகிய போது இழந்தது.
2007 – இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
2009 – சோமாலியா, முக்தீசூவில் உணவு விடுதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமைச்சர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
2012 – பிலிப்பீன்சில் போபா சூறாவளி தாக்கியதில் 475 பேர் உயிரிழந்தனர்.
2014 – சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளை நோக்கி ஆறு-ஆண்டுகள் திட்டமாக ஹயபுசா 2 என்ற விண்கலத்தை தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.
இன்றைய பிறப்புகள்
1753 – சாமுவேல் கிராம்டன், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர், நெசவுத் துறையின் முன்னோடி (இ. 1827)
1795 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1879)
1833 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர் (இ. 1915)
1857 – ஜோசப் கொன்ராட், போலந்து-ஆங்கிலேய எழுத்தாளர், போர்வீரர் (இ. 1924)
1884 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (இ. 1963)
1886 – மன்னே சீகுபான், நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (இ. 1978)
1889 – குதிராம் போஸ், வங்காளப் புரட்சியாளர் (இ. 1908)
1900 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமன் வேதியியலாளர் (இ. 1967)
1909 – கே. ராஜலிங்கம், இலங்கையின் மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத்தலைவர் (இ. 1963)
1925 – கிம் டாய் ஜுங், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்கொரிய அரசுத்தலைவர் (இ. 2009)
1931 – விஜய்குமார் மல்கோத்திரா, இந்திய அரசியல்வாதி
1933 – பால் சோசப் கிரட்சன், டச்சு வேதியலாளர்
1935 – நெல்லை ஆ. கணபதி, தமிழக சிறுவர் புதின எழுத்தாளர்
1948 – புதுவை இரத்தினதுரை, ஈழத்துக் கவிஞர்
1960 – ஜூலியானா மூரே, அமெரிக்க நடிகை, எழுத்தாளர்
இன்றைய இறப்புகள்
1154 – நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) (பி. 1073)
1552 – பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர் , புனிதர் (பி. 1506)
1882 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1803)
1894 – ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர் (பி. 1850)
1969 – கோவைக்கிழார், தமிழகத் தமிழறிஞர், வழக்கறிஞர் (பி. 1888)
1979 – தியான் சந்த், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் (பி. 1905)
1998 – முடியரசன், தமிழகக் கவிஞர் (பி. 1920)
2000 – குவெண்டலின் புரூக்ஸ், அமெரிக்கக் கவிஞர் (பி. 1917)
2010 – அநுத்தமா, தமிழக எழுத்தாளர் (பி. 1922)
2011 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1923)
இன்றைய சிறப்பு நாள்
மருத்துவர் நாள் (கியூபா)
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்