👉 1963ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நாகாலாந்து இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
👉 1965ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
முக்கிய தினம் :-
உலக எய்ட்ஸ் தினம்
🌟 உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
🌟 எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயை 1981ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். இது எச்.ஐ.வி. (HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987இல் இத்தினம் அறிவிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வுகள்
800 – வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார்.
1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
1768 – அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.
1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசராக முடிசூடினார்.
1828 – அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான்.
1834 – தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது.
1875 – வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். இலங்கைத் தமிழர் சார்பில் சொலமன் ஜோன்பிள்ளை வரவேற்புரையைப் படித்தார்.[1]
1913 – தெற்கு அரைக்கோளத்தின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பிரேசிலின் புவெனஸ் ஐரிஸ் நகரில் ஆரம்பமாகியது.
1913 – முதலாவது பால்கான் போரை அடுத்து துருக்கியிடம் இருந்து சுயாட்சி உரிமை பெற்ற பெற்ற கிரீட் கிரேக்கத்துடன் இணைந்தது.
1918 – திரான்சில்வேனியா உருமேனியாவுடன் இணைந்தது.
1918 – ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
1918 – சேர்பிய, குரொவாசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொசிலாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
1924 – எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1934 – சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். யோசப் ஸ்டாலின் இந்நிகழ்வைப் பயன்படுத்தி பெரும் துப்புரவாக்கத்தை ஆரம்பித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசர் இறோகித்தோ அமெரிக்காவுடனான போரை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்தார்.
1958 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரெஞ்சு ஒன்றியத்தினுள் சுயாட்சி பெற்றது.
1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் உயிரிழந்தனர்.
1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1960 – கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
1961 – இந்தோனேசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
1971 – கெமர் ரூச் போராளிகள் கம்போடிய அரசு நிலைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1973 – பப்புவா நியூ கினி ஆத்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
1974 – அமெரிக்காவின் வர்ஜீனியாவில் போயிங் 727 வானூர்தி வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
1974 – ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு வடமேற்கே போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
1981 – யுகோசுலாவியாவின் வானூர்தி ஒன்று கோர்சிகாவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் உயிரிழந்தனர்.
1988 – உலக எயிட்சு நாள் ஐக்கிய நாடுகளினால் அறிவிக்கப்பட்டது.
1989 – பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு செருமனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
1989 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவைப் பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.
1991 – பனிப்போர்: உக்ரைன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
1997 – இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ரன்வீர் சேனா அமைப்பினர் கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்குள்ள இலக்சுமன்பூர்-பதி என்ற ஊரைத் தாக்கி 63 தலித்துகளைக் கொன்றனர்.
2006 – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.
இன்றைய பிறப்புகள்
1895 – காகா காலேல்கர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1981)
1900 – சாமி சிதம்பரனார், தமிழக இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க செயல்பாட்டாளர் (இ. 1961)
1901 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (இ. 1960)
1918 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (இ. 2001)
1935 – வுடி ஆலன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1949 – பப்லோ எசுகோபர், கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவர் (இ. 1993)
1949 – செபஸ்டியான் பினேரா, சிலியின் 35வது அரசுத்தலைவர்
1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்
1955 – உதித் நாராயண், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1963 – அர்ஜுன றணதுங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர், அரசியல்வாதி
இன்றைய இறப்புகள்
1825 – முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (பி. 1777)
1859 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (பி. 1790)
1866 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சிய புவியியலாளர் (பி. 1790)
1916 – சார்லஸ் தெ ஃபூக்கோ, பிரான்சிய மதகுரு (பி. 1858)
1927 – பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி, இந்திய நிருவாகி (பி. 1862)
1947 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1877)
1964 – ஜே. பி. எஸ். ஹால்டேன், ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (பி. 1892)
1973 – டேவிட் பென்-குரியன், இசுரேலின் 1வது பிரதமர் (பி. 1886)
1974 – சுசேதா கிருபளானி, உத்தரப் பிரதேச முதலமைச்சர்.(பி. 1908)
1980 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (பி. 1896)
1990 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (பி. 1900)
2001 – எல்லிஸ் ஆர். டங்கன், அமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1909)
2012 – தேவேந்திரலால், இந்திய புவியியற்பியலாளர் (பி. 1929)
2015 – விக்கிரமன், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)
2016 – இன்குலாப், தமிழகக் கவிஞர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1944)
இன்றைய சிறப்பு நாள்தொகு
குடியரசு நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
விடுதலை நாள் (போர்த்துக்கல்)
ஆசிரியர் நாள் (பனாமா)
உலக எயிட்சு நாள்