குறள் : 957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதக்கண் மறுப்போல் உயர்ந்து.
மு.வ உரை :
உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம் ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
கலைஞர் உரை :
பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்
சாலமன் பாப்பையா உரை :
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.
Kural 957
Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin
Madhikkan Maruppol Uyarndhu
Explanation :
The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.
Horoscope Today: Astrological prediction for December 09 2022
இன்றைய ராசிப்பலன் - 09.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
09-12-2022, கார்த்திகை 23, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 11.34 வரை பின்பு தேய்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.59 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் | Indraya Raagu Kalam
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 09.12.2022 | Today rasi palan - 09.12.2022
மேஷம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகளால் ஆதாயங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உடன்பிறப்புகளால் மனஅமைதி சற்று குறையும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவீர். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்கள் அறிமுகம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
சிம்மம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். கடன் பிரச்சினைகள் தீரும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஈடுபாடு சற்று குறையும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்பட இடையூறு இருந்தாலும் லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த சிக்கல்கள் விலகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது, வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களினால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது.
மீனம்
இன்று நீங்கள் பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.