புத்தம் புதிய எக்ஸ்பல்ஸ் 200டி பைக்: ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார் சைக்கிளின் புத்தம் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
எக்ஸ்பல்ஸ் 200 வரிசையில் மேம்படுத்தப்பட்ட, புதிய எக்ஸ் பல்ஸ் 200டி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத் தியுள்ளோம்.
200 சிசி என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை ரூ.1,25,726-ஆக (மும்பை காட்சியக விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் என்ஜின் அதிகபட்சமாக 19.1 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தும்.
முழுமையான எண்ம (டிஜிட்டல்) முறையில் செல்லும் வேகம், கியர் எண், போக வேண்டிய இடத்துக்கான வழி ஆகியவற்றைக் காட்டும் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், அறிதிறன் பேசியுடன் (ஸ்மார்ட் போன்) இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த புதிய மோட்டார் சைக்கிளில் இடம் பெற்றிருக்கும். மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்காகவே முரட்டுத் தோற்றத்துடன் புதிய எக்ஸ் பல்ஸ் 200டி வடிவமைக் கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.