வேலூர் விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்படும் சாமந்தி பூக்கள்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து சாமந்தி பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் கொண்டுவரப்படுகிறது.
பூக்கள் வரத்து அதிகரித்ததால் அதன் விலை வீழ்ச்சியை கண்டது. 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டத்தில் பூக்கள் விளைவித்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
உரிய விலைக்கு சாமந்தி பூக்கள் விற்பனையாகாததால் அதை அவர்கள் சாலையோரம் கொட்டும் நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று சற்று விலை உயர்ந்துள்ளதாகவும், படிப்படியாக சாமந்தி பூக்கள் விலை உயர வாய்ப்பு உள்ள தாகவும் பூ வியாபாரிகள்தெரிவித்தனர்.