புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதில் வரும் டிசம்பர் 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 

டிசம்பர் 31ம் தேதி மாலை முதல் சுமார் 90,000 காவல் துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 


நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. 

புத்தாண்டில்போது கடற்கரையில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாடக்கூடாது என கூறியுள்ளது.