A two-wheeler crashed into the wall of Erikarai near Solingar, a youth was killed, and the villagers blocked the road!




ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கிருஷ்ணாவரம் கிராமம் ராமானுஜம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் தனசேகரன் (35). இவர் சூரை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேற்பாா்வையாளராக பணி செய்து வருகிறாா்.

இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 7. 00 மணிக்கு தனது வீட்டில் இருந்து கிளம்பி பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் நிலையத்தில் இருந்து உறவினைரை அழைத்து செல்ல தனது இரு சக்கரவாகனத்தல் வந்துள்ளாா்.

அப்போது ஆயல் கிராமம் ஏரிக்கரை அருகே வரும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து ஏரிகரையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சுவற்றில் மோதி கீழே விழந்துள்ளாா், இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தள்ளனா்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பாணாவரம் கால்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.