குறள் : 972

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


மு.வ உரை :

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

கலைஞர் உரை :

பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்

சாலமன் பாப்பையா உரை :

எல்லா மக்களும் பிறப்பால் சமம??; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.


Kural 972

Pirappokkum Ellaa Uyirkkum Sirappovvaa

Seydhozhil Vetrumai Yaan

Explanation :

All human beings agree as regards their birth but difer as regards their characteristics because of the d ifferent qualities of their actions.



Horoscope Today: Astrological prediction for December 24 2022


இன்றைய ராசிப்பலன் - 24.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


24-12-2022, மார்கழி 09, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 12.07 வரை பின்பு வளர்பிறை துதியை. பூராடம் நட்சத்திரம் இரவு 10.15 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 24.12.2022 | Today rasi palan - 24.12.2022


மேஷம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக அசதி சோர்வு உண்டாகும். எளிதில் முடியக்கூடிய காரியம் கூட தாமதமாக முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கடன்கள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை குறைக்கலாம். பணவரவு சுமாராக இருக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுர்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு வேலைபளு சற்று குறையும். புதிய யோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 

கும்பம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001