குறள் : 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.


மு.வ உரை :

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும் தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

கலைஞர் உரை :

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்

சாலமன் பாப்பையா உரை :

நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.


Kural 965

Kundrin Anaiyaarum Kundruvar Kundruva

Kundri Anaiya Seyin

Explanation :

Even those who are exalted like a hill will be thought low if they commit deeds that are debasing.



Horoscope Today: Astrological prediction for December 17 2022


இன்றைய ராசிப்பலன் - 17.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


17-12-2022, மார்கழி 02, சனிக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.42 வரை பின்பு தேய்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் காலை 09.18 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 17.12.2022 | Today rasi palan - 17.12.2022

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

கன்னி

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபகரமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

துலாம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்

இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்ல வேண்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001