ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு(32), தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தனது பெரியம்மா சாவித்திரி பராமரிப்பில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்தார். டில்லிபாபுவிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் டில்லிபாபுவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், தெங்கால் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் டில்லி பாபு நேற்று காலை சடலமாக மிதந்து கொண்டிருந்தாக அப்பகுதி மக்கள் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், இன்ஸ் பெக்டர்(பொறுப்பு) பார்த்தசாரதி, எஸ்ஐ ஜான் சேவியர் மற்றும் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாவித்திரி சிப்காட் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டில்லிபா புவை யாராவது கொலை செய்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அதற்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.