‘தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து இருந்தார். 'கோப்ரா' படத்தில் விக்ரம் 8 தோற்றங்களில் வந்தார். இவற்றை யெல்லாம் மிஞ்சும் வகையில், சூர்யா அவரது 42-வது படத்தில் 13 வேடங்களில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் படக்கு ழுவினர் இன்னும் இதனை உறு திப்படுத்தவில்லை. கதை மற்றும் கதாபாத்திரங்களை ரகசியமாக வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

இது சரித்திர காலத்து கதையம்சம் உள்ள படமாக தயாராவதை உறுதி செய்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கிறார்கள். இந்த படத்தில் நாயகியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது.

தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. கேரளாவிலும் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அடுத்து வெற்றி மாறன் இயக்கும் 'வாடி வாசல்' படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே பாலா இயக்கும் ‘வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.