👉 1986ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா பிறந்தார்.

👉 2001ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய ஹைட்ரஜன் நிலையில் உள்ள மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளிமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

👉 1975ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை ஆரம்பித்த ராஸ் மாக்வேர்ட்டர் மறைந்தார்.

👉 2008ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் மறைந்தார்.

பிறந்த நாள் :-

புரூஸ் லீ


👦 உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும், பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ் கோ-வில் பிறந்தார்.

👦 யிப் மான் என்பவரிடம் தற்காப்பு கலையை ஆர்வத்துடன் கற்றார். இவர் தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சொந்தமாக ஒரு நூலகமே வைத்திருந்தார்.

👦 சீன தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில், தற்காப்பு பயிற்சிப் பள்ளியை தொடங்கினார். மேற்கத்திய மல்யுத்தம், ஜூடோ, கராத்தே, குத்துச்சண்டையுடன் சில புதிய முறைகளையும் சேர்த்து புது வடிவிலான தற்காப்பு கலையை உருவாக்கினார். 'ஜீட் குன் டோ' என்ற கலை இவரால் பிரபலமடைந்தது.

👦 இவர் 1971ஆம் ஆண்டு 'தி பிக் பாஸ்' படத்தில் நடித்தார். இப்படம் ஆசிய கண்டத்தை அசத்தியது. சண்டைக் காட்சிகளில் இவரது வேகத்துடன் கேமராவின் வேகம் ஈடுகொடுக்க முடியாமல் 24 என்று இருந்த ஃபிரேம் அளவை 34-ஆக மாற்றிய ஹாலிவுட் வரலாறு இன்றளவும் பேசப்படுகிறது.

👦 நான்கு படங்கள் மட்டுமே நடித்து, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சாதனையாளரான புரூஸ் லீ 32வது வயதில் (1973) மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகு வெளிவந்த 'என்டர் தி டிராகன்' படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் உலகெங்கும் உள்ள இளைஞர்களை ஈர்த்த தனிமனிதன் இவராகத்தான் இருக்க முடியும்.


இன்றைய நிகழ்வுகள்


25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.


602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.


1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார்.


1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது.


1830 – அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார்.


1895 – ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் உதுமானியர்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.


1895 – பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.


1912 – மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.


1935 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது வானூர்தி சென்னையில் இருந்து வந்திறங்கியது.


1940 – உருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.


1944 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.


1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் உருசியாவையும் கேட்டுக் கொண்டார்.


1971 – சோவியத்தின் "மார்ஸ் 2" விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.


1975 – கின்னசு உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரியக் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


1978 – துருக்கியில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) ஆரம்பிக்கப்பட்டது.


1983 – கொலம்பியாவின் போயிங் 747 விமானம் எசுப்பானியா தலைநகர் மத்ரிதில் வீழ்ந்து நொருங்கியதில் 181 பேர் உயிரிழந்தனர்.


1989 – போயிங் 727 வானூர்தி கொலம்பியாவின் நடுவானில் வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 107 பேரும், தரையில் மூவரும் கொல்லப்பட்டனர்.


1989 – ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.


1997 – அல்சீரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.


2001 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.


2004 – யோவான் கிறிசோஸ்தோம் புனிதரின் எச்சங்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கிழக்கு மரபுவழி திருச்சபையிடம் ஒப்படைத்தார்.


2005 – பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.


2006 – கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.


2007 – ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.


2007 – ஈழப்போர்: இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


2009 – மாஸ்கோவிற்கும், சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமடைந்தனர்.


இன்றைய பிறப்புகள்


1701 – ஆன்டர்சு செல்சியசு, சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1744)


1888 – கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர், இந்திய அரசியல்வாதி (இ. 1956)


1899 – ஆ. பூவராகம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1973)


1903 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியியலாளர் (இ. 1976)


1907 – ஹரிவன்சராய் பச்சன், இந்தியக் கவிஞர், நூலாசிரியர் (இ. 2003)


1911 – பே டெல் முண்டோ, பிலிப்பீனிய மருத்துவர் (இ. 2011)


1930 – பி. வி. வனஜா பாய், இந்திய சமூக செயற்பாட்டாளர் (இ. 2007)


1940 – புரூசு லீ, அமெரிக்க-சீன நடிகர், தற்காப்புக்கலை நிபுணர் (இ. 1973)


1942 – ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க கித்தார் கலைஞர், பாடகர் (இ. 1970)


1942 – மிருதுளா சின்கா, இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி


1952 – பப்பி லஹரி, இந்தியப் பாடகர்


1960 – யூலியா திமொஷென்கோ, உக்ரைனின் 10வது பிரதமர்


1965 – பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதி (இ. 2008)


1972 – ரிசாத் பதியுதீன், இலங்கை அரசியல்வாதி


1973 – சத்தியேந்திர துபே, இந்தியப் பொறியாளர் (இ. 2003)


1977 – உதயநிதி ஸ்டாலின், தமிழகத் திரைப்பட நடிகர்


1986 – சுரேஷ் ரைனா இந்தியத் துடுப்பாட்டக்காரர்


இன்றைய இறப்புகள்


கிமு 8 – ஓராசு, உரோமைக் கவிஞர் (பி. கிமு 65)


1852 – அடா லவ்லேஸ், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815)


1875 – ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1826)


1950 – தி. சதாசிவ ஐயர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1882)


1982 – லெப்டினன்ட் சங்கர், ஈழப்போராட்டத்தில் இறந்த விடுதலைப் புலிகளின் முதல் போராளி (பி. 1960)


1989 – கே. ஏ. சுப்பிரமணியம், இலங்கை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1931)


2003 – ஹரிவன்சராய் பச்சன், இந்தியக் கவிஞர் (பி. 1907)


2003 – சத்தியேந்திர துபே, இந்தியப் பொறியாளர் (பி. 1973)


2008 – வி. பி. சிங், 7வது இந்தியப் பிரதமர் (பி. 1931)


2010 – எஸ். ஜேசுரத்தினம், இலங்கை வானொலி, மேடை நாடக, திரைப்பட நடிகர் (பி. 1931)


2014 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1988)


இன்றைய சிறப்பு நாள்


மாவீரர் நாள் (தமிழீழம்) (தமிழீழம், இலங்கை)


ஆசிரியர் நாள் (எசுப்பானியா)