👉 2008ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகரான நம்பியார் மறைந்தார்.
முக்கிய தினம் :-
சர்வதேச ஆண்கள் தினம்
👦 சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
👦 உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது.
உலக கழிப்பறை தினம்
🌸 உலக கழிப்பறை தினம்,ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை 2013ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது.
பிறந்த நாள் :-
இந்திரா காந்தி
🌟 இந்தியாவின் துணிச்சல்மிக்க பெண்மணி இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு, நவம்பர் 19ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள் ஆவார்.
🌟 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்றார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், மத்திய அணுசக்தி துறை அமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய விண்வெளித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
🌟 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் விடுதலைக்காக தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தன்னுடைய 66வது வயதில் மறைந்தார்.
இராணி இலட்சுமிபாய்
🌺 விடுதலைப் போராட்ட வீரர் ஜான்சி இராணி 1828ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வாரணாசியில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த இராணி இலட்சுமிபாய் 1858ஆம் ஆண்டு தனது 29ஆம் வயதில் மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர்.
1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.
1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1862 – இலங்கை, காலியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற கொழும்பு என்ற பயணிகள் கப்பல் மாலைதீவுகளுக்கு அருகே மினிக்காய் தீவில் மூழ்கியது.[1][2]
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கெட்டிசுபெர்க்கு உரையை நிகழ்த்தினார்.
1881 – உக்ரேனில் ஒடெசா நகரில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.
1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பிய இராணுவம் பித்தோலா நகரைக் கைப்பற்றியதன் மூலம், மாக்கடோனியாவில் ஐந்து நூற்றாண்டு கால உதுமானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி, கோர்மொரன் ஆகிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆத்திரேலியக் கடற்படையினரும் 77 நாட்சி ஜெர்மனியக் கடற்படையினரும் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை: சோவியத் படையினர் வோல்கோகிராட் நகர் மீது மீள்தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
1943 – பெரும் இன அழிப்பு: நாட்சிகள் மேற்கு உக்ரைனில் லிவீவ் நகரில் இருந்த யானொவ்சுக்கா வதை முகாமை முழுமையாக அழித்தனர். குறைந்தது 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1946 – ஆப்கானித்தான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ல்சு கொன்ராட், ஆலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர் என்ற பெயரினைப் பெற்றனர்.
1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது இலக்கைப் பெற்றார்.
1977 – போர்த்துகல் போயிங் விமானம் ஒன்று மதீராவில் விபத்துக்குள்ளாகியதில் 131 பேர் உயிரிழந்தனர்.
1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் உயிரிழந்தனர்.
1985 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.
2002 – கிரேக்க எண்ணெய்த் தாங்கிக் கப்பல் பிரெஸ்டிச் கலீசியா அருகே இரண்டாகப் பிளந்ததில், 76,000 கனமீ எண்ணெய் கசிந்தது.
2010 – நியூசிலாந்தில் பைக் ஆற்றுச் சுரங்கத்தில் நான்கு வெடிப்புகள் நிகழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
2013 – பெய்ரூத்தில் ஈரானியத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.
இன்றைய பிறப்புகள்
1600 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (இ. 1649)
1711 – மிகைல் இலமனோசொவ், உருசிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1765)
1775 – யொஃகான் இல்லிகெர், செருமானிய விலங்கியலாளர் (இ. 1813)
1828 – இராணி இலட்சுமிபாய், ஜான்சி பேரரசி (இ. 1858)
1831 – சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது அரசுத்தலைவர் (இ. 1881)
1845 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1939)
1907 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976)
1909 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்கக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2005)
1914 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, இந்திய சுதந்திர போராட்ட செயற்பாட்டாளர், சீர்திருத்தவாதி (இ. 1982)
1917 – இந்திரா காந்தி, 3வது இந்தியப் பிரதமர் (இ. 1984)
1918 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், இடச்சு வானியலாரும். கணிதவியலாளர் (இ. 2000)
1918 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய மார்க்சியப் புலமையாளர் (இ. 1993)
1923 – சலில் சௌதுரி, இந்திய இயக்குநர், இசையமைப்பாளர் (இ. 1995)
1928 – தாரா சிங், இந்திய மற்போர் வீரர், நடிகர், அரசியல்வாதி (இ. 2012)
1932 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர் (இ. 2009)
1933 – ஜேக் வெல்ச், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
1936 – அரவிந்த் பட்நாகர், இந்திய வானியலாளர் (இ. 2006)
1938 – டெட் டேர்னர், அமெரிக்கத் தொழிலதிபர்
1939 – எஸ். எம். கார்மேகம், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2005)
1951 – க. பத்மநாபா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நிறுவனர் (இ. 1990)
1951 – சீனத் அமான், இந்தியத் திரைப்பட நடிகை
1954 – அப்துல் பத்தா அல்-சிசி, எகிப்தின் 6வது அரசுத்தலைவர்
1961 – விவேக், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 2021)
1961 – மெக் ரையன், அமெரிக்க நடிகை
1973 – சகீலா, இந்திய நடிகை
1975 – சுஷ்மிதா சென், இந்தித் திரைப்பட நடிகை
1976 – அருண் விஜய், தமிழகத் திரைப்பட நடிகர்
1976 – ஜேக் டோர்சி, அமெரிக்கத் தொழிலதிபர், டுவிட்டரை ஆரம்பித்தவர்களில் ஒருவர்
1986 – சுவேதா மோகன், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
இன்றைய இறப்புகள்
498 – இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
1665 – நிக்கோலா போசின், பிரான்சிய-இத்தாலிய ஓவியர் (பி. 1594)
1806 – இரண்டாம் ஷா ஆலம், இந்தியாவின் 16-வது முகலாயப் பேரரசர் (பி. 1728)
1828 – பிராண்ஸ் சூபேர்ட், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1797)
1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியப் பிரதமர் (பி. 1892)
1975 – சாலமன் பிக்கெல்னர், உருசிய-சோவியத் வானியலாளர் (பி. 1921)
1982 – எஸ். ஏ. அசோகன், தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1931)
1984 – சி. வி. வேலுப்பிள்ளை, இலங்கை மலையக எழுத்தாளர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1914)
1998 – புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1920)
2008 – எம். என். நம்பியார், தென்னிந்திய நடிகர் (பி. 1919)
2011 – பேசில் ட'ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1931)
2013 – பிரடெரிக் சேங்கர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1918)
2017 – சார்லஸ் மேன்சன், அமெரிக்க மதத் தலைவர், கொலையாளி (பி. 1934)
2019 – டி. எம். ஜயரத்ன, இலங்கையின் 14-வது பிரதமர் (பி. 1931)
இன்றைய சிறப்பு நாள்
பன்னாட்டு ஆண்கள் நாள்
உலகக் கழிவறை நாள்
விடுதலை நாள் (மாலி)