🌷 1904ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஜான் பிளெமிங் வெற்றிடக் குழாயை கண்டுபிடித்தார்.
🌷 1945ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
முக்கிய தினம் :-
சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
🌹 சர்வதேச சகிப்புத்தன்மை தினம் நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமான யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1995ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.
🌹 இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பிறந்த நாள் :-
ஜோஸ் டிசோஸா சரமாகூ
✍ இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் ஜோஸ் டிசோஸா சரமாகூ 1922ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி போர்ச்சுக்கல் நாட்டின் ரீபாட்டஜோ மாகாணத்திலுள்ள அசின்ஹாகா என்ற கிராமத்தில் பிறந்தார்.
✍ இவரது முதல் நூலான 'லேண்ட் ஆஃப் சின்' 1947ஆம் ஆண்டு வெளியானது. 1950ஆம் ஆண்டின் இறுதியில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு பிரபல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது.
✍ இவர் 1966ஆம் ஆண்டு 'பாஸிபிள் போயம்ஸ்' என்ற கவிதை நூலை வெளியிட்டார். தொடர்ந்து, 'பிராபப்ளி ஜாய்', 'திஸ் வேர்ல்டு அண்டு தி அதர்', 'டிராவலர்ஸ் பேக்கேஜ்' ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
✍ இவர் எழுதிய 'பால்டாஸர் அண்ட் ப்ளிமுண்டா' (Baltasar and Blimunda) என்ற நாவல் உலக அளவில் அங்கீகாரத்தையும், வாசகர்களையும் பெற்றுத் தந்தது. இந்த நாவலுக்கு போர்ச்சுக்கீசிய பென் கிளப் விருது கிடைத்தது. 1980ஆம் ஆண்டில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள் என ஏராளமான படைப்புகளை எழுதினார்.
✍ இவருடைய உலகப் புகழ்பெற்ற நாவலான 'பிளைண்ட்னஸ்' (Blindness) 1995ஆம் ஆண்டு வெளிவந்தது. ஜோஸ் டிசோஸா சரமாகூ 87வது வயதில் (2010) மறைந்தார்.
இன்றைய நிகழ்வுகள்
1272 – இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது.
1491 – எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர்.
1532 – எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
1776 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன.
1793 – பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க பிரிவினைவாத மதகுருக்கள் 90 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1797 – புருசியாவின் மன்னராக மூன்றாம் பிரெடெரிக் வில்லியம்சு முடி சூடினார்.
1846 – இலங்கையில் கைம்பெண்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
1849 – அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி உருசிய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு, கடுந்தொழில் செய்யக் கட்டளையிடப்பட்டார்.
1852 – ஆங்கிலேய வானியலாளர் யோன் ரசல் இந்த் என்பவர் 22 கலியோப் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1885 – "மானிட்டோபாவின் தந்தை" என அழைக்கப்பட்ட கனடாவின் மேட்டிசுப் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தேசத்துரோகக் குற்றஞ் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
1904 – ஆங்கிலேயப் பொறியியலாளர் ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
1907 – ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
1920 – ஆத்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாசு ஆரம்பிக்கப்பட்டது.
1933 – ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1938 – எல்எசுடி முதல் தடவையாக ஆல்பர்ட் ஹாப்மன் என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது.[2]
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படை ஆம்பர்கு மீது குண்டுகளை வீசியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் குயின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945 – யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1945 – பனிப்போர்: அமெரிக்க இராணுவம் செருமனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
1965 – சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
1973 – மூன்று விண்ணோடிகளுடன் 84 நாள் பயணமாக ஸ்கைலேப் 4 விண்கலத்தை நாசா ஏவியது.
1974 – ஆரசீபோ தகவல் 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன்களுக்கு புவேர்ட்டோ ரிக்கோவில் அரசீபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
1988 – சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 – மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் எல் சல்வடோர் இராணுவத்தினர் இயேசு சபையைச் சேர்ந்த ஆறு மதகுருக்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றனர்.
2002 – சார்சு நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.
இன்றைய பிறப்புகள்
1717 – ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1783)
1922 – ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய-எசுப்பானிய எழுத்தாளர் (இ. 2010)
1930 – சினுவா அச்சிபே, நைஜீரிய எழுத்தாளர் (இ. 2013)
1938 – ரோபேர்ட் நோசிக், அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 2002)
1962 – அம்பிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1971 – வக்கார் யூனிசு, பாக்கித்தானியத் துடுப்பாளர்
1983 – தமன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1985 – ஆதித்யா ராய் கபூர், இந்தித் திரைப்பட நடிகர்
1975 – ரங்கராஜ் பாண்டே, ஊடகவியலாளர்
இன்றைய இறப்புகள்
1240 – இப்னு அரபி, அராபிய மெய்யியலாளர் (பி. 1165)
1801 – ஊமைத்துரை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி
1903 – திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1869)
1960 – கிளார்க் கேபிள், அமெரிக்க நடிகர், பாடகர் (பி. 1901)
1977 – கனக செந்திநாதன், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர் (பி. 1916)
1985 – சித்பவானந்தர், இந்தியத் துறவி (பி. 1898)
2006 – மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1912)
2021 – பாரதி மணி, தமிழக எழுத்தாளர், நடிகர் (பி. 1937)
இன்றைய சிறப்பு நாள்
உலக சகிப்புத் தன்மை நாள்