தீபத் திருவிழா முன்னிட்டு வேலூர்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 


உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதை யொட்டி தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் சிறப்புரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன் மெண்ட் வரை செல்லும் பாசஞ்சர் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக் கப்படுகிறது.

மேலும், இந்த ரயில் மாலை 6 மணியளவில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கி வேலூர் கண்டேண் மெண்ட் ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 9.50 மணியளவில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு செல்லும், இந்த ரயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம்சிம்பந்தி, திருஞ்சாபுரம் என திருவண்ணாமலை வரை இயக்கப்படும். மேலும், திருவண்ணாமலையில் இருந்து 3.45 மணியளவில் வேலூர் கண்டோண்மெண்ட் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.