குறள் : 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
மு.வ உரை :
சூதாடு கருவியும் ஆடும் இடமும் கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர் (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
கலைஞர் உரை :
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்
சாலமன் பாப்பையா உரை :
சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.
Kural 935
Kavarum Kazhakamum Kaiyum Tharukki
Ivariyaar Illaaki Yaar
Explanation :
Penniless are those who by reason of their attachment would never forsake gambling the gambling place and the handling (of dice).
Horoscope Today: Astrological prediction for November 16 2022
இன்றைய ராசிப்பலன் - 16.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
16-11-2022, ஐப்பசி 30, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை அஷ்டமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கால பைரவாஷ்டமி. பைரவர் - நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 16.11.2022 | Today rasi palan - 16.11.2022
மேஷம்
இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவினாலும் செலவுகளும் அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் சிறு இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்
இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று நீங்கள் எடுத்த காரியம் முடிப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.
மகரம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமை குறையும்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும்.
மீனம்
இன்று எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை ஏற்படும். வேலையில் உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001
Horoscope-Today-Astrological-prediction-for-November-16-2022