குறள் : 934

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

மு.வ உரை :

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை

கலைஞர் உரை :

பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை

சாலமன் பாப்பையா உரை :

துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

Kural 934

Sirumai Palaseydhu Seerazhikkum Soodhin
Varumai Tharuvadhondru Il

Explanation :

There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (ones) reputation.

Horoscope Today: Astrological prediction for November 15 2022



இன்றைய ராசிப்பலன் - 15.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

15-11-2022, ஐப்பசி 29, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பின்இரவு 05.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூசம் நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் 

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 15.11.2022 | Today rasi palan - 15.11.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.

ரிஷபம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் லாபம் சற்று குறைவாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறாமல் தடைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானமாக செயல்பட்டால் நற்பலனை பெறலாம். ஆரோக்கிய பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

கடகம்

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபார ரீதியான பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உங்கள் பொருட்களை மற்றவர்களுக்கு இரவல் கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தள்ளி வைப்பது நல்லது. 

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காணலாம்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001