குறள் : 929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
மு.வ உரை :
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல் நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.
கலைஞர் உரை :
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்
சாலமன் பாப்பையா உரை :
போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.
Kural 929
Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk
Kuliththaanaith Theeththureei Atru
Explanation :
Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.
Horoscope Today: Astrological prediction for November 10 2022
இன்றைய ராசிப்பலன் - 10.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
10-11-2022, ஐப்பசி 24, வியாழக்கிழமை, துதியை திதி மாலை 06.33 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 05.08 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 10.11.2022 | Today rasi palan - 10.11.2022
மேஷம்
இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு வீண் பிரச்சினைகள் தோன்றும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையாட்களின் ஒத்துழைப்போடு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை காணலாம்.
கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளும் வரவுக்கு மீறி அதிகமாக இருக்கும். வேலையில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.
தனுசு
இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம். செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் பொறுமை தேவை.
கும்பம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். பொருளாதார நிலை சற்று சுமாராக இருந்தாலும் உடன்பிறந்தவர்கள் உதவியால் தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001